⚫🇫🇷பிரான்ஸில் கொரோனா பரிசோதனையில் புதிய சாதனை!

கடந்த ஒரே வாரத்தில் 5.7 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ‘கட்டாய சுகாதார பாஸ்’ நடைமுறையின் அழுத்தம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்தில் மொத்தமாக 5,706,700 கொரோனா பரிசோதனைகளும் அவற்றில் மூன்றில் ஒரு பகுதி (67.4% வீதம் – 3,848,663 பரிசோதனைகள்) அண்டிஜென் சோதனைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 9 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் 4,194,900 பேருக்கு (4.1 மில்லியன்) கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்தவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொரோனா பரிசோதனை ஒரு புதிய சாதனையாகும்.