♦️🇫🇷பிரான்ஸில் நிகழ்ந்த பயங்கரம்! பதறவைக்கும் படுகொலை!

ஒரு விரைவு உணவக உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். Labatut (Landes) இல் இல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஒரு விரைவு உணவகத்தின் (fast-food) முன்னால் அதன் உரிமையாளருடன் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இந்த இரண்டு பேரும், இந்த விரைவு உணவக உரிமையாளரை மிக மோசமாகக் கத்தியால் குத்தித் தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் அதில் ஒருவன் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான்.

பல கத்திக் குத்திற்கும், முதுகில் துப்பாக்கிச் சூட்டிற்கும் இலக்கான இந்த 31 வயதுடைய உணவக உரிமையாளர், உயிராபத்தான நிலையில் உலங்கு வானூர்தி மூலம்Pau (Pyrénées-Atlantiques) வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனாலும் சிகிச்சைகள் பலனின்றி இவர் சாவடைந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட இரண்டு குற்றவாளிகளும் தப்பியோடி உள்ளனர். காவற்துறையினர் இவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.