🇫🇷பிரான்ஸில் இடம்பெற்ற அதிரடி கைது!👮‍♂️ பயங்கரவாதிகளா?

பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் தொடர்புடைய ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் 17 தொடக்கம் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், Angers, Toulouse, Lyon மற்றும் Seine-et-Marne நகரங்களில் அனைவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களின் முன்னர் Samuel Paty எனும் பேராசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட Abdullakh Anzorov எனும் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணைகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.