♦️🇫🇷பிரான்ஸ் பெண்னின் அதிர்ச்சி செயல்! நீரில் மிதந்த யூரோக்கள்😲!

கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Dijon (Côte-d’Or) நகரில் இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அவரை நெருங்கிய காவல்துறையினர், அவரை அங்கிருந்து வெளியேறும் படி பணித்தனர். அதன்போது ஒரு விநோத நடவடிக்கையை காவல்துறையினர் கவனித்தனர். குறித்த பெண் பை நிறைய யூரோ தாள்களை வைத்துக்கொண்டு, அதை தூக்கி வீசிக்கொண்டும் இருந்துள்ளார். 10, 20 மற்றும் 50 யூரோ தாள்கள் என பல யூரோ தாள்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்துள்ளன.

உடனடியாக குறித்த பெண்ணை கைது செய்தனர். அத்தோடு பணத்தாள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 50.000 யூரோக்கள் அவரிடம் இருந்ததாகவும், ஆனால் 47.200 யூரோக்கள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி தாள்கள் குறித்த நீரூற்றின் வடிகால் பகுதிக்குள் நுழைந்து அடைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.