⚫🇫🇷பிரான்ஸில் பெண்னின் சடலம் மீட்பு!

இந்திய பெண் ஒருவரின் சடலம் ஒன்று Val-d’Oise நகரில் மீட்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என அறிய முடிகிறது. நேற்று புதன்கிழமை பகல் 1 மணி அளவில் இந்த சடலம் மீட்க்கப்பட்டது. Arnouville-lès-Gonesse (Val-d’Oise) நகரில் உள்ள தேனீ வளர்க்கும் பகுதி ஒன்றில் இருந்து இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இங்கு தேனி வளர்க்கும் ஒருவர் மரப்பலகைகளுக்கிடையே இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து காவல்துறையினரை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். 20 வயதுகளையுடைய குறித்த இளம் பெண் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் எனவும், கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் எதுவும் சம்பவ இடத்தில் இருந்து மீட்க்கப்படவில்லை. விசாரணைகளை Versailles நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.