⚫🇫🇷இயல்பு வாழ்க்கையை நோக்கி பிரான்ஸ்! பிரதமர் வெளியிட்ட தகவல்!

நாங்கள் சரியான பாதையில் தான் செல்கின்றோம் என பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார். புதிய கல்வி ஆண்டு ஆரம்பிப்பதற்கு இரு நாட்கள் உள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Jean Castex Strasbourg (Bas-Rhin), நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்றிருந்தார்.

நான்காம் தொற்று அலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதா என பார்வையிடுதற்காக அங்கு சென்றிருந்தார். அங்கு வைத்து அவர் ஊடகத்தினரிடம் தெரிவிக்கும் போது, “நாங்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி மிகச்சரியான வழியில் சென்றுகொண்டுள்ளோம். நான்காம் தொற்று அலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

ஆனால் நாங்கள் தொடர்ந்தும் இதே முயற்சியில் ஈடுபடவேண்டும். நாங்கள் இன்னும் முழுதாக இலக்கை அடையவில்லை. கூட்டமாகவும், தனித்தனியாகவும் பொறுப்புடன் தொடர்ந்தும் நடந்துகொள்ள வேண்டும்!” என பிரதமர் தெரிவித்தார்.