🇫🇷பிரான்ஸ் முழுவதிற்கும் 18h00 மணி ஊரடங்கா? இன்று பிரதமர் ஊடகச் சந்திப்பு!

இன்று 18h00 மணிக்கு, பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ், தனது முக்கிய அமைச்சர்கள் சகிதம், ஊடகச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ளார். கொரோனா, ஊரடங்கு, பொருளாதாரம், தடுப்பு ஊசி என முட்டை மேல் நடப்பது போன்றதொரு சூழ்நிலை உள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். இன்றைய ஊடகச் சந்திப்பில், சுகாதார அமைச்சர், நிதியமைச்சர், கல்வியமைச்சர், கலாச்சார அமைச்சர், உயர்கல்வியமைச்சர் போன்றோரும், பிரதமருடன் பதிலளிக்க உள்ளனர்.

18h00 மணி ஊரடங்கானது, 25 மாவட்டங்களையும் தாண்டி, நாடு முழுவதும் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் தொக்கி நிற்கின்றது. இதற்கான பதிலை இன்று 18h00 மணிக்கு அறிந்து கொள்ளலாம்.