🇫🇷நாளை முதல் பிரான்ஸில் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள்!

நாளை சனிக்கிழமை முதல் இல் து பிரான்சுக்குள் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. நாளை, சனிக்கிழமை முதல் நாடு முழுவதும், மாலை 6 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது. மறு நாள் காலை 6 மணி வரை இந்த ஊரங்கு நடைமுறையில் இருக்கும். இதனால் பொது போக்குவரத்துக்களில் மாலை நேர நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக Île-de-France Mobilités சில சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழமை போன்று இல்லாமல், ‘நெருக்கடியான வேலை நேரம்’ (l’heure de pointe) நாளை முதல் 3.30 மணியில் இருந்து ஆரம்பிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இருந்து SNCF மற்றும் RATP ஆகிய போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் சேவைகளை (பேருந்து, தொடருந்து மற்றும் ட்ராம்) இதற்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான வேலை நேரத்தின் போது 25% இல் இருந்து 30% வீதமான மேலதிக சேவைகள் வழங்கப்படும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.