⚫🇫🇷பிரான்ஸில் தேடப்படும் ஆயுததாரியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை!

கடந்த 24 மணிநேரங்களுக்கு மேலாக தேடப்பட்டு வரும் ஆயுததாரியின் புகைப்படத்தை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Lardin-Saint-Lazare பகுதியில், நேற்று காலை முதல் ஆயுததாரி ஒருவரை அதிரடிப்படையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பான பலதரப்பட்ட செய்தியினை நாம் உடனுக்குடன் வழங்கியிருந்தோம்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை வரை 24 மணிநேரங்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில், சற்று முன்னர் தேடப்பட்டு வரும் ஆயுததாரியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 29 வயதுடைய Terry Dupin என்பவரே தேடப்பட்டு வருகின்றார். இவர் முன்னாள் இராணுவ வீரர் எனவும், பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.