⚫🇫🇷பிரான்ஸ் காவல்துறை மீது தாக்குதல்!

ஆடம்பர கைக்கடிகார திருட்டு ஒன்றை தடுக்க முற்பட்ட காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

அன்று இரவு 8 மணி அளவில் Place du Maréchal Juin பகுதியில் நின்றுகொண்டிருந்த 37 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர், மூன்று பேர் கொண்ட குழு நபர் ஒருவரிடம் இருந்து கைக்கடிகாரம் ஒன்றை திருடுவதை கண்டார். அப்போது காவல்துறை அதிகாரி கடமையில் இல்லாத போதும், இந்த குற்றத்தை தடுக்க முயற்சி செய்தார். இதன்போது குற்றவாளிகள் மகிழுந்து மூலம் காவல்துறை அதிகாரி மீது மகிழுந்தினால் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவல்துறை அதிகாரியின் மோட்டார் சைக்கிள் நொருங்கியுள்ளது. இலேசான காயங்களுடன் காவல்துறை அதிகாரி தப்பித்துள்ளார். இருந்தபோதும் அவர் மூன்று குற்றவாளிகளில் ஒருவரை மடக்கி பிடித்து வைத்துக்கொண்டு தனது சக அதிகாரிகளை அழைத்துள்ளார்.


மிக விரைவாக அங்கு வந்தடைந்த காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்ததுடன், தப்பி ஓடியவர்கள் தொடர்பான விபரங்களையும் சேகரித்துக்கொண்டனர். ரோலக்ஸ் ஆடம்பர கடிகாரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் பரிசில் ஆடம்பர கைக்கடிகார திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.