⚫🇫🇷 பிரான்ஸ் காவல்துறை மீது துப்பாக்கி சூடு!

நேற்று வியாழக்கிழமை இரவு Martinique தீவில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தில் இரு காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த இரண்டுவார காலமாக இங்கு பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை வாசகர்கள் அறிந்ததே. இரவு நேர ஊரடங்கு போடப்பட்டும் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது. நான்கு ஊடகவியலாளர்கள் மற்றும் AFP ஊடகத்தின் புகைப்படக்கலைஞர் ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்தோடு இரு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். Fort-de-France பகுதியில் வைத்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் ஒரு அதிகாரிக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும், மற்றய அதிகாரிகாரி குண்டு துளைக்காத மேலங்கி அணிந்திருந்ததால் அவர் காயங்களின்றி தப்பியதாகவும் அறிய முடிகிறது.

Martinique தீவிரில் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை போடப்பட்டிருந்த ஊரடங்கை தற்போது மாலை 7 மணியில் இருந்து அதிகரித்துள்ளதாக தீவக காவல்துறையினர் தெரிவித்தனர்.