🔴🇫🇷👮‍♂️பிரான்ஸில் €20 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இவ்வருடத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (l’Office anti-stupéfiant) இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்தவாரத்தின் இறுதியில் Le Havre (Seine-Maritime) நகரில், வீதியில் பயணித்த ‘விநியோக’ வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்த அதிகாரிகள், அதனை சோதனையிட்டனர்.

குறித்த வாகனம் நெதர்லாந்தில் இருந்து பிரான்ஸ் ஊடாக பெல்ஜியம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளது. வாகனத்தை சோதனையிட்ட நிலையில் உள்ளே 600 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை அதிகாரிகள் மீட்டதுடன், வாகனத்தில் பயணித்த மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு €20 மில்லியன் யூரோக்கள் எனவும், இவ்வருடத்தில் மீட்கப்பட்ட அதிகபட்ச மதிப்பு கொண்ட போதைப்பொருள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.