🇫🇷பிரான்ஸில் மீண்டும் வெடித்தெழுந்த போராட்டம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டமான ‘”Sécurité globale” இற்கு எதிரான போராட்டங்கள், இன்று பிரான்சின் பெருநகரங்களில் மீண்டும் வெடித்துள்ளது. அரசாங்கம் கொண்டு வந்த 24 வது சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பரிஸ் உட்பட Lyon, Lille, Nantes, Rennes, Strasbourg, Montpellier, Toulon, Nice, Dijon, La Rochelle, Quimper, Abbeville, Tarbes, Le Havre ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. பரிசிலும், நோந்திலும், காவற்துறையினருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.