⚫🇫🇷பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களைப் பெற புதிய இணையத்தளம்!

நீங்கள் கொரோனத் தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொண்டுவிட்டால் அதற்கான சான்றிதழ்களைப் பெற, தேசிய சுகாதாரக் காப்புறுதியான Assurance maladie புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. attestation-vaccin.ameli.fr எனும் இந்தத் தளத்தின் மூலம் உங்களிற்கான கொரேனாத் தடுப்பு ஊசிச்சான்றிதழைப் பெறுவதுடன் உங்களிற்கான சுகாதாரச் சான்றிதழான “pass sanitaire” இனை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் வெளிநாடுகளிற்கான பயணங்களையும் இலகுவாக்கிக் கொள்ள முடியும்.

இந்தத் கொரோனாத் தடுப்பு ஊசிச் சான்றிதழைப் பெற, FranceConnect, இன் நுழைவு எண் அவசியம். இதனைப் புதிதாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். உள்களின் வருமான வரி மற்றும் பல இலத்திரனியல் ஆவணங்களை இந்த நுழைவு எண்ணின் மூலம் பெற்றுக்கள்ள முடியும்.