🔴🇫🇷பிரான்ஸில் பதவி விலகிய இராணுவ தலைமை அதிகாரி!

பிரெஞ்சு இராணுவ தலைமைச் செயலதிகாரி François Lecointre பதிவி விலகியுள்ளார். ஜனாதிபதியின் எலிசே மாளிகை இத்தகவலை அறிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை François Lecointre தனது தலைமைச் செயலதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இவர் கடமையாற்றி வருகின்ற நிலையில், அவருக்கு பதிலாக ஜெனரல் Thierry Burkhard பதவியேற்க உள்ளார்.
ஜூலை 14 ஆம் திகதி தேசிய நாளின் பின்னர் அவர் மீண்டும் பதவியேற்க உள்ளார். “ François Lecointre மிக நன்றாக தனது பொறுப்பினை ஆற்றியுள்ளார். அவருக்கு எங்கள் தேசத்தின் நன்றி!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.