⚫🇫🇷பிரான்ஸில் மீட்கப்பட்ட சடலங்கள்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வீடொன்றில் இருந்து மூவரது சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன. Nogent-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டே இவர்கள் சாவடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை அணைத்தனர். ஆனால் மூவரையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தீ பரவியது விபத்தா இல்லை குற்றச்செயலா என்பது தொடர்பாக அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.