♦️🇫🇷பிரான்ஸில் மீட்கப்பட்ட சடலங்கள்!

Vendée மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் இருவர் சடலமாக மீட்க்கப்பட்டதை அடுத்து, அவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை காலை இந்த இரு சடலங்களும் மீட்கப்பட்டிருந்தது. Notre-Dame-de-Riez நகரில் வசித்துவந்த தம்பதிகள் இருவரது சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

சடலங்களை மீட்ட காவல்துறையினர், 1984 ஆம் ஆண்டு பிறந்த அவர்களது மகன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வரும் நாட்களில் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதை அடுத்தே மேலதிக விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.