🇫🇷பிரான்ஸில் கடதாசி பெட்டியில் வீட்டுக்கு வந்த மகனின் சடலம்!

மகனை படுகொலை செய்துவிட்டு, கடதாசி பெட்டியில் அடைத்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று Mée-sur-Seine நகரில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை நண்பகலின் பின்னர் இச்சம்பவம் Melun நகர் அருகே உள்ள Mée-sur-Seine, Seine-et-Marne எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய நபர் ஒருவரை படுகொலை செய்து, அவரை ஒரு கடசாசி பெட்டிக்குள் அடைத்து அதை கொலை செய்யப்பட்டவருடைய தாயாரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசித்த தாய் மற்றும் இளைய மகன் ஆகியோர் பெட்டியை பிரித்து பார்த்துள்ளனர். அதன் போது பெட்டிக்குள் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிராந்திய காவல்துறையினருக்கு மாலை 6 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். இந்த பெட்டி ஒரு ‘பொதி விநியோக’ நிறுவனத்தினால் அவர்களிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் சந்தேகநபராக 41 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டவரின் சகோதரி என அறிய முடிகிறது. உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.