⚫🇫🇷பிரான்ஸில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு வரும் புதிய சிக்கல்!

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடற்பயணங்களுக்கு எதிராக செயலாற்ற மேலதிகமாக காவல்துறையினர் குவிக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கையில், Dunkerque இல் இருந்து la Baie de Somme வரையான 130 கிலோமீற்றர் கடற்பிராந்தியத்தில் சிறப்பு காவல்துறையினர் நிறுத்தப்பட உள்ளனர். சட்டவிரோதமாக கடலில் இறங்கி பிரித்தானியா நோக்கி பயணிப்பதையும், பிரான்சுக்குள் நுழைவதை தடுக்கவும் இந்த அதிகாரிகள் செயற்படுவார்கள் எனவும் Gérald Darmanin தெரிவித்தார்.

நூறுக்கும் அதிகமான நடமாடும் காவல்துறையினர் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அத்தோடு கமராக்கள், 300 மின் விளக்குகள் உள்ளிட்ட சில பாதுகாப்பு கருவிகளும் காவல்துறையினருக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.