⚫🇫🇷திறந்தவெளி அகதி முகாம்! பிரான்ஸில் ஒரு சாட்சியம்!

காபூல் ஓர் திறந்த வெளி அகதி முகாமாக உள்ளது. மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் குவிந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் உப தலைவரான விக்டோரியா பொந்தோன் (Victoria Fontan) தெரிவித்துள்ளார்.
இவர் நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்சிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட இவர் ஊடகங்களிற்குச் செவ்வி வழங்கி உள்ளார். அங்கு அனைத்தும் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. எந்த எதிர்ப்பும் இன்றி காபூல் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாககக் காபூலை விட்டு வெளியேற விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்காக நாங்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வரிசையில் இருத்தி வைக்கப்பட்டோம். விமானம் தரையிறங்கி 20 நிமிடங்களிற்குள் விமானத்திற்குள் ஏற வேண்டும். விமான நிலையத்தின் சிறுபகுதி தற்போது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுக் காத்திருக்கும் பலரைப் பின்னால் விட்டுவிட்டே நாங்கள் தப்பி உள்ளோம் எனத் தெரிவித்துள்ள விக்டோரியா பொந்தோன் ஐந்தாவது விமானத்திலேயே மீட்டு வரப்பட்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தின் சிறுபகுதி தற்போது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுக் காத்திருக்கும் பலரைப் பின்னால் விட்டுவிட்டே நாங்கள் தப்பி உள்ளோம் எனத் தெரிவித்துள்ள விக்டோரியா பொந்தோன் ஐந்தாவது விமானத்திலேயே மீட்டு வரப்பட்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது!!