🔴🇫🇷பிரான்ஸில் தோல்வியில் முடிந்த பார்பிகியூ சமையல்!

பார்பிகியூ உணவும் தயாரிக்கும் இயந்திரம் ஒன்று வெடித்துச் சிதறியதில் இருவர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் La Courneuve (93) நகரில் இடம்பெற்றுள்ளது. பார்பிகியூ உணவு தயாரிக்கும் முயற்சியில் இருவர் ஈடுபட்டிருந்தனர் அதன்போது மின்சாரத்தினால் இயங்கிக்கொண்டிருந்த குறித்த பார்பிகியூ இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் 43 வயதுடைய ஒருவருக்கு முள்ளுக்கரண்டி குத்தி காயம் ஏற்பட்டது. அவர் Clichy-la-Garenne (Hauts-de-Seine) நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது 16 வயது மகனும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை La Courneuve காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.