🔴🇫🇷💉பிரான்ஸில் AstraZeneca தடுப்பூசி தொடர்பாக மீண்டும் சர்ச்சை! வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்காலிக தடை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் AstraZeneca தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக l’Agence européenne des médicaments (ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம்) வெளியிட்ட தரவுகளின் படி, குறித்த தடுப்பூசி ‘பக்கவிளைவற்றது. பாதுகாப்பானது!’ என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே மீண்டும் பிரான்சில் இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 50 வயது தொடக்கம் 65 வயதுடையவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு சிக்க எழுந்துள்ளது.

தற்போது, பிரான்சுக்கான உயர் சுகாதார ஆணையம் (Haute Autorité de Santé) ஒரு புதிய தடையை விதித்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 50 என இருந்த வயது வரம்பை 55 வயதாக அதிகரித்துள்ளது. ‘ஆபத்துக்கு வாய்ப்புகள் உள்ளது’ என தெரிவித்த Haute Autorité de Santé, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, Pfizer மற்றும் Moderna ஆகிய தடுப்பூசிகளும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே போடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடைக்குப் பின்னர், AstraZeneca தடுப்பூசியை பிரதமர் Jean Castex சற்று முன்னர் போட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.