🇫🇷பிரான்ஸ் மாணவர்களுக்கு ஏற்பட்ட துயர நிலை!

பரிசில் உள்ள பாடசாலை ஒன்றில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Sainte-Louise பாடசாலையிலேயே இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வார திங்கட்கிழமையில் இருந்து சுகாதார நடவடிக்கைகள் இப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கிட்டத்தட்ட 1.200 மாணவர்களுக்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பாடசாலையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட வகுப்பறைகள் மூடப்பட்டு, மீதமாக வகுப்புகள் இயங்குகின்றன. பரிசில் உள்ள 14,000 பாடசாலைகளில் இதுவரை மொத்தமாக 7 பாடசாலைகள் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளன. 345.000 மாணவர்களில் 300 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.