⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் பதற்றம்! யூத பாடசாலைக்குள் நுழைந்த ஆயுததாரி!

யூத பாடசாலை ஒன்றுக்குள் ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது சம்பவம் Marseille இன் 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை இங்குள்ள l’école juive Yavné பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 8.15 மணி அளவில் கைகளில் கூரான கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு பாடசாலைக்குள் நுழைந்துள்ளார்.

உடனடியாக BAC அதிகாரிகள் அழைக்கப்பட்டு, ஆயுததாரியை கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது பாடசாலை மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆயுத்தாரியின் நோக்கம் குறித்து தற்போதுவரை அறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரி சம்பவ இடத்துக்கு மகிழுந்து ஒன்றில் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.