⚫🇫🇷இல் து பிரான்ஸ் பாடசாலைகளுக்கு மேலதிகமாக இரண்டுவார விடுமுறை!

இல் து பிரான்ஸ் மாணவர்களுக்கு மேலதிகமாக இரண்டுவார கால விடுமுறை வழங்கவேண்டும் என மாகாண முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். நாங்கள் ஒரு விடுப்பு எடுக்க வேண்டும். எங்களிடம் போதிய விடுமுறைகள் இல்லை! என மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார். வசந்த கால விடுமுறை வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடுமுறையை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து, ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் மே 3 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என Valérie Pécresse, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இல் து பிரான்சுக்குள் கொரோனா வைரஸ் நிலமை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இந்த விடுமுறை கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.