😲🇫🇷பிரான்ஸில் களமிறங்கிய அதிரடிப்படையினர்!

வீட்டுக்குள் சிறைவைத்துக்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவரை காப்பாற்ற, அதிரடிப்படையினர் களமிறங்கிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நண்பகலின் பின்னர் Poissy (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த இரு நாட்களாக பணிக்கு திரும்பவில்லை. அத்தோடு அவர் தொடர்பான எத்தகவலும் கிடைக்கவில்லை. தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், அவர் தொடர்பான உடனடியாக சக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து நேற்று, rue Frémont வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினர் சென்றனர்.
குறித்த 57 வயதுடைய அதிகாரி வீட்டுக்குள் தன்னை சிறை வைத்துக்கொண்டதாகவும், கையில் ரைஃபிள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதை அடுத்து சம்பவ இடத்துக்கு RAiD அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர். 4.30 மணிக்கி ஆரம்பித்த அதிரடிப்படையினரின் தலையீடு மாலை 6.45 மணிக்கு நிறைவடைந்தது. தற்கொலை எண்ணத்தில் இருந்த குறித்த அதிகாரி காப்பாற்றப்பட்டார். அவர் நீண்ட நாட்களாக தனிமையில் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள முனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.