🇫🇷பிரான்ஸ் மக்களின் திடீர் முடிவு! அறிமுகமான புதிய செயலி!

மிக பிரபலமான WhatsApp செயலியில் அண்மையில் புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி WhatsApp பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்க பயனாளர்களிடன் அனுமதி கோரியுள்ளது. இதனை கட்டாயமாக அனுமதித்தால் மாத்திரமே WhatsApp தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்டுப்பாட்டுக்கு இணங்காத மக்கள் WhatsAppல் இருந்து வெளியேறி வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் இருந்து பல மில்லியன் மக்கள் WhatsAppல் இருந்து வெளியேறுவதை அடுத்து, பிரெஞ்சு மக்களும் வெளியேற தொடங்கியுள்ளனர்.
வாட்சாப்பிற்கு பதிலாக Signal எனும் செயலியை பிரெஞ்சு மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பிரான்சில் ஆன்ட்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் அதிகம் தரவிறக்கப்பட்ட செயலிகளில் இந்த Signal செயலியே தற்போது முதலிடத்தில் உள்ளது.