⚫🇫🇷பிரான்ஸில் நிகழ்ந்த துயர சம்பவம்! பறிபோன சிறுமியின் உயிர்!

எட்டு வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை Cergy-Pontoise (Val-d’Oise) நீர்த்தடாகத்தில் இடம்பெற்றுள்ளது. நீச்சலுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நீந்திக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.

இரவு 7.17 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதே இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் மூழ்கி சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.