🇫🇷பிரான்ஸில் சிறுமி ஒருவர் பரிதாப மரணம்!

பேருந்து விபத்து ஒன்றில் மூன்று வயது சிறுமி சாவடைந்துள்ளார். இக் கோர விபத்து நேற்று வியாழக்கிழமை Pantin (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue du quartier Bresson வீதியில் 3 வயது சிறுமி ஒருவர் அவரது குடும்பத்தினர் ஒருவருடன் நடந்துசென்றுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத நேரம் குறித்த சிறுமி பேருந்து ஒன்றுக்குள் சிக்குண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்ட போதும் அவர்களால் எதுவும் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மாலை 5:15 மணி அளவில் இக்கோர விபத்து இடம்பெற்றது. சாவடைந்த சிறுமி Pantin நகரில் உள்ள La Marine மழலையர் பாடசாலையில் கல்வி கற்கின்றதாக அறிய முடிகிறது.