🇫🇷பிரான்ஸில் கிருஸ்மஸ் வாழ்த்து தெரிவித்த சிறுமி படுகொலை!

கிருஸ்மஸ் வாழ்த்து தெரிவித்த சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று 24 ஆம் திகதி இரவு Limay (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை கத்தியால் தாக்கியுள்ளார். கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்த சிறுமியையே அவர் தாக்கியுள்ளார். தவிர மற்றுமொரு 4 வயது சிறுவனையும் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் 8 வயது சிறுமி சாவடைந்துள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.