⚫🇫🇷பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் தொடர்புடைய 12 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நண்பகல் Metz (Moselle) நகரில் இடம்பெற்றுள்ளது. Patrotte பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். இந்த தாக்குதலை 12 வயதுடைய சிறுவன் ஒருவன் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.