🇫🇷பிரான்ஸ் சிறுவனின் அதிர்ச்சி செயல்! காவல்துறையின் அதிரடி!

காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து சென்ற சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று சனிக்கிழமை Saint-Germain-en-Laye (Val-d’Oise) நகரின் அருகே காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது ஆடம்பர மகிழுந்து ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்திக்கொண்டிருப்பதை பார்த்து, குறித்த மகிழுந்தை நிறுத்த பணித்துள்ளனர். ஆனால், குறித்த சிறுவன் மகிழுந்தை நிறுத்தாமல் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளான். காவல்துறையினர் அவனை துரத்திச் சென்றனர்.

தப்பிச் சென்ற சிறுவன் வீதிகளில் சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திக்கொண்டும், வாகனங்களை மோதி தள்ளிக்கொண்டும் தப்பி ஓடியுள்ளான். இதனால் குறித்த சிறுவனை நிறுத்தும் முகமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சிறுவனது மகிழுந்து தொடருந்து பயணிக்காமல் ஓரிடத்தில் நின்றது. வாகனத்தில் இருந்து இறங்கி சிறுவன் கால்களால் தப்பி ஓடியுள்ளான். இறுதியாக ஒரு மணிநேரம் கழித்து Vésinet, Yvelines நகரில் வீதியில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டான். கைதான சிறுவன் 16 வயதுடையவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.