⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!

தினமும் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டுள்ளோம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஜனவரி மாதத்தில் இருந்து நாம் தினமும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை போடக்கூடிய நிலையில் இருப்போம்!”

என தெரிவித்த அமைச்சர் Olivier Véran, “ஜனவரி மாதத்தில் நாளாந்தம் 100,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளார்கள். எனவே அதற்கு இணையாக தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க வேண்டும்!”

எனவும் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் விரைவாக செய்துமுடிக்க உள்ளோம் எனவும் சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.