🔴🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் முக்கிய சந்திப்பு!

சுகாதார அமைச்சர் Olivier Véran மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. சுகாதார அமைச்சர் Olivier Véran மற்றும் ‘சுகாதார பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள், தாதியர், மருந்தக உரிமையாளர்கள், மருத்துவச்சிகள் ஆகியோரை சந்திக்கின்றனர்.
அவர்களுடன் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளையும் சுகாதார அமைச்சர் சந்திக்கின்றார். மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுவது தொடர்பான கலந்துரையாடல்கள் இந்த சந்திப்பின் போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.