⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அனுமதி சான்றிதழ்! வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரம்!

தொடர்ச்சியாக பிரான்சில் சுகாதார அனுமதிச் சான்றிதழான Pass sanitaire இற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்தாலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே உள்ளதாக கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.


இந்தக் கருத்துக் கணிப்புப் படி பத்துப் பேரிற்கு ஆறு பேர் சுகாதார அனுமதிச் சான்றிதழிற்கு ஆதரவாகவே உள்ளனர்.
Elabe எனும் புள்ளிவிபரக் கருத்துக் கணிப்பில் பிரான்சில் 64 சதவீதமானவர்கள் சுகாதார அனுமதிச் சான்றிதழிற்கு ஆதரவு தெரிவித்துள்னர்.
விமானம் மற்றும் தொடருந்துகளில் பயணிப்பவர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 74 சதவீதமானவர்கள் சுகாதார அனுமதிச் சான்றிதழிற்கு ஆதரவாக உள்ளனர்.


உணவகம், அருந்தகம், திரையரங்குகன் போன்றவற்றிற்கான சுகாதார அனுமதிச் சான்றிதழிற்கு 72 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.