நாடு முழுவதும் 833 கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். 75 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ள சுகாதார அமைச்சர் Olivier Véran, இதுவரை 318.000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெப்ரவரி மாத இறுதிக்குள் 2.4 மில்லியனில் இருந்து 4 மில்லியன் பேர் வரை தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்சில் புதிதாக பல கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 18 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் 833 கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை காலை, Troyes, Aube நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு சென்ற சுகாதார அமைச்சர் Olivier Véran, அங்கு வைத்தே இதனை தெரிவித்தார்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!