Lardin-Saint-Lazare பகுதியில் இன்று 300 இற்கும் மேற்பட்ட படைகளுடனும் உலங்குவானூர்திகளுடனும் ஒரு முன்னாள் இராணுவீரர் தேடப்படக் காரணம் என்ன? நேற்று நள்ளிரவளவில், இந்த நபர் தனது முன்னாள் துணைவியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால் இலத்திரனியல் காப்புடன் சிறையிலிருந்து வெளியேறிய இவர், தனது முன்னாள் துணைவியைச் சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இவர் அங்கு சென்றபோது, இவரது தற்போதைய துணைவியும் அங்கு நின்றுள்ளார். இதனால் பெரும் சச்சரவு ஏற்பட, இவர் துப்பாக்கியயை எடுத்ததையடுத்து, தற்காலத் துணைவி தப்பியோடி உள்ளார்;. உடனடியாக இவர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்த, முன்னாள் துணைவியின் குழந்தைகள் அலறியதையடுத்து, அயலவர்கள் ஜோந்தார்மினரை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த ஜோந்தார்மினரின் வாகனங்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன், கத்தியினால் வாகனங்களின் சிற்களையும் குத்திக் கிழித்து விட்டுத் தப்பியோடி உள்ளார்.
இவர் ஒரு காட்டுப்பகுதிக்குள் பதுங்கியதையடுத்து, இவரது சிறை இலத்திரனியல் காப்பினை புலனாய்ந்து, இவர் பதுங்கி உள்ள நான்கு சதுர கிலோமீற்றர் காட்டுப்பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!