⚫🇫🇷விசேட செய்தி! நாடு ஒன்றிற்கு தடைவிதித்த பிரான்ஸ்!

தென்னாபிரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவதை பிரான்ஸ் தடை செய்துள்ளது. தென்னாபிரிக்காவில் புதிய திரிபு கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த புதியவகை கொரோனா வைரசினை உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வு செய்து வருகின்றது. B.1.1.529 என விஞ்ஞான ரீதியாக பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வீரியம் மிக்கதாகும்.


இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து வருகை தருவதற்கு இத்தாலில், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்து வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது. முதல்கட்டமாக தென்னாபிரிக்காவில் இருந்து வரும் பிரான்சுக்குள் வரும் அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்பப்பட்டுள்ளது.

நிலமைகளை ஆராய்ந்து அதன்பின்னர், தளர்வுகள் கொண்டுவரப்படும் அல்லது/ தனிமைப்படுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்படுவார்கள் போன்ற முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தென்னாபிரிக்க திரிபு வைரஸ் சற்று முன்னர் இஸ்ரேலிலிலும் கண்டறியப்பட்டதாக அங்கிருக்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.