🔴🇫🇷💉AstraZeneca தடுப்பூசிகள் பாதுகாப்பானது! மீண்டும் பிரான்ஸில் அனுமதிக்கப்படுமா?

பல்வேறு சர்ச்சைக்குள்ளான AstraZeneca தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம் (L’Agence européenne du médicament ) இத்தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், குறித்த AstraZeneca தடுப்பூசிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தார். முன்னெச்சரிக்கை காரணமாக 24 மணிநேரங்கள் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபத்தின் இறுதி முடிவின் பின்னரே மீண்டும் பிரான்சில் தடுப்பூசிகள் பயன்படுத்துவது தொடர்பாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சற்று முன்னர் ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனத்தின் தலைவர் Emer Cooke தெரிவிக்கும் போது, இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசியாகும். இது கொவிட் 19 வைரசிடம் இருந்து மக்களை பக்கவிளைவின்றி பாதுகாக்கின்றது. என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, மீண்டும் பிரான்சில் AstraZeneca தடுப்பூசிகள் அனுமதிக்கப்படலாம் என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.