⚫🇫🇷பிரான்ஸில் சர்ச்சையில் AstraZeneca தடுப்பூசிகள்!

AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் இருவர் சாவடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த AstraZeneca தடுப்பூசியினால் thrombosis எனும் நாளங்களில் இரத்தம் உறைதல் எனும் மிக அரிதான பக்கவிளைவு ஏற்படுகின்றது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ஒருவரும், இம்மாதம் (மே) 6 ஆம் திகதி ஒருவரும் சாவடைந்துள்ளனர்.

பிரான்சில் இந்த AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 34 பேருக்கு இந்த நாளங்களில் இரத்தம் உறைதல் எனும் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் இந்த பக்கவிளைவினால் சாவடைந்துள்ளனர். ஆனால் பிரான்சில் இதுவரை 4,068,000 பேர் AstraZeneca தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனார். அரசு தொடர்ந்தும் இந்த தடுப்பூசிக்கு ஆதரவாக பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.