⚫💉🇫🇷பிரான்ஸில் தடுப்பூசி போடாதவர்களை கொன்று குவித்த நான்காம் தொற்றலை!

தடுப்பூசி போடாதவர்களே நான்காம் தொற்று அலையில் அதிகம் சாவடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை ஊடக சந்திப்பில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அது தொடர்பான செய்திகளை முன்னதாக நாம் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், “நான்காம் தொற்று அலையில் உச்சக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். நான்காம் தொற்று அலை அடிபடையில் தடுப்பூசி போடாதவர்களையே கொன்றுள்ளது.மருத்துவமனையில் தடுப்பூசி போடாதவர்களே நிரம்பியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களையே மரணம் நெருங்குகின்றது!” என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுவரை 48,096,179 பேர் தங்களது முதலவாது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இது நாட்டு மக்கள் தொகையில் 71.3% வீதமாகும். 42,789,803 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இது நாட்டு மக்கள் தொகையில் 63.5% வீதமாகும்.