♦️🇫🇷💉பிரான்ஸ் முதற்கட்ட கொரோனா தடுப்பூசிகள்! வெளியான புள்ளி விபரம்!

இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பொதுமக்கள் சுகாதாரத்துறையின் தரவுகளின்படி, பிரான்சின் 30 மில்லியன் பேரிற்கு முதல் அலகு கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியனை நெருங்கி, 29.831.488 பேரிற்கு இந்த முதல் அலகு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
தற்போது சாராசரியாக ஒரு நாளைக்கு மூன்று இலட்சம் (300.000) ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. நாளை சனிக்கிழமை மூன்று மில்லியனைத் தாண்டி சில இலட்சங்களை எட்டிவிடும்.
13.722.706 பேரிற்கு இரண்டாவது தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. 15.406.347 மில்லியன் பேரிற்கு முற்றாக ஊசிகள் போடப்பட்டுள்ளன.

முழுமையாக தடுப்பு ஊசிகள் போடப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இரண்டு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வேறுபடுவதற்குக் காரணம், ஏற்கனவே கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்களிற்கு ஒரு அலகு கொரோனாத் தடுப்பு ஊசிகளுடன் மட்டும் அவர்களிற்கான தடுப்பு ஊசிகள் முற்றுப் பெறுகின்றன. நோய்த் தொற்று ஏற்படாதவர்களிற்கே இரண்டு அலகு ஊசிகளும் போடப்படுகின்றன.