⚫🇫🇷💉பிரான்ஸில் வேலை செய்யும் அனைவருக்கும் தடுப்பூசி!

வேலை செய்யும் அனைவரிற்கும் முன்னுரிமையாக கொரேனாத் தடுப்பு ஊசிகள் போடும்படி, பிரான்சின் பிரதான தொழிற்சங்கங்களின் ஒன்றான CFDT கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் அரச பொதுத் துறைப் பணியாளர்களிற்கு என பிரத்தியேக கொரோனாத் தடுப்பு ஊசி மையங்களைத் திறந்துள்ளமையைப் பாராட்டி உள்ளார் CFDT இன் அரச பொதுப்பணித்துறைக்கான தொழிற்சங்கத்தின் (CFDT Fonctions publiques) செயலளர் மிலென் ஜாக்கோ (Mylène Jacquot) அவர்கள்.

அதே நேரம், அரச பொதுத் துறையோ அல்லத தனியார் துறைகளோ, வேலை செய்யும் அனைவரிற்கும் தடுப்பு ஊசிகளைப் போட அரசாங்கமும், நிறுவனங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுடன் தொடர்புடைய, தொற்று ஆபத்து அதிகம் உள்ள, துறைகளிற்கு உடனடி முக்கியத்துவம் கொடுக்குமாறு, தொழிற்துறை அமைச்சரிடம், தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.