⚫🇫🇷💉பிரான்ஸில் Astrazeneca போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

AstraZeneca தடுப்பூசிகளுக்கு தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 1.3 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரான்சில் மொத்தமாக 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1.3 மில்லியன் பேருக்கு இந்த AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிக்கு பிரான்சில் அனுமதி அளித்து ஒரு மாதம் ஆன நிலையில், தற்போது பல்வேறு சர்ச்சைகள் இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் பல நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளன. இறுதியாக நேற்று திங்கட்கிழமை பிரான்சும் தடை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக 24 மணிநேரங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது AstraZeneca தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் ‘தாம் அச்சத்தில் இருப்பதாக’ பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

AstraZeneca தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதிலளித்துள்ளார்.

அவர்கள் ஆபத்தில் இல்லை. தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் மேலதிகமாக எதையும் செய்யத்தேவையில்லை!’ என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.

AstraZeneca தடுப்பூசிகள் பிரான்சில் கொண்டுவரப்பட்டபோது முதன் முதலாக அதனை போட்டுக்கொண்டவர் சுகாதார அமைச்சர் Olivier Véran என்பது குறிப்பிடத்தக்கது.