⚫🇫🇷பிரான்ஸில் உடைக்கப்பட்ட தடுப்பூசி மையம்! அதிர்ச்சியில் காவல்துறை!

தடுப்பூசி மையம் ஒன்று உடைக்கப்பட்டு, ஆயிரம் வரையான தடுப்பூசிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு துலு நகர அருகே உள்ள Saint-Orens (Haute-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை தடுப்பூசி நிலையத்துக்கு பணிக்கு திரும்பிய பணியாளர்கள், அங்கு நிலையம் சேதமாக்கப்பட்டு, தடுப்பூசிகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை முழுமையாக ஆராய்ந்தனர். ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் இரண்டு கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த தளபாடங்களை அடித்து நொருக்கியதுடன், தடுப்பூசிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 1000 தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் நாள் தோறும் 700 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.