⚫🇫🇷பிரான்ஸ் தடுப்பூசிகள்! சுகாதார அமைச்சர் பெருமிதம்!

இன்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டிவிடும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை வரை 19.806.232 பேருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

முன்னதாக கிருஸ்துமஸ் நாளுக்குள் 20 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்று 21 ஆம் திகதியே அந்த இலக்கை அடைந்துவிடுவோம் என அமைச்சர் அறிவித்தார். “இன்று நாங்கள் 20 மில்லியன் எனும் இலக்கை அடைந்துவிடுவோம்.

முன்னர் எப்போதும் இல்லாத அளவு உழைத்து, டெல்டாவிடம் இருந்தும் ஒமிக்ரோனிடம் இருந்தும் எங்களை காத்த மருத்துவத்துறைக்கு எனது நன்றிகள்” என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார். “நாங்கள் தொடர்கிறோம். இன்னும் வலுவாக தொடர்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து வெற்றியடைவோம்!” என அவர் மேலும் தெரிவித்தார்.