🔘🇫🇷பிரான்ஸில் முடங்கும் தடுப்பூசிகள்! வெளியான முக்கிய காரணம்!

இந்தக் கோடைகாலத்தில், பெருமளவான பிரெஞ்சு மக்களிற்கு தடுப்பூசிகள் போடுவது பெருமளவில் பின்தங்கி உள்ளது. சுகாதார அனுமதிப்பத்திரமான pass sanitaire இனைப் பெறுவதற்கு, பெருமளவான மக்கள் வெறும் கொரோனா விரைவுப் பரிசோதனைகளைச் செய்து கொள்கின்றனர்.

இது இந்தக் கல்வியாண்டு ஆரம்பம் வரை, விடுமுறைக்காலம் முடியும்வரை, நீடிக்கவே உள்ளது. அரசாங்கம் ஒக்டோபர் நடுப்பகுதிவரை, கொரோனாப் பரிசோதனைகள் இலவசமாகவே இருக்கும் என்று அறிவித்திருக்கும் நிலையில், கொரோனாப் பரிசோதகைளின் எண்ணிக்கை பெரும் சாதனை படைத்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தின் 9ம் திகதி முதல் 15ம் திகதி வரையான வாரத்திற்குள் மட்டும் 6 மில்லியன் கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் மூன்றில் இரண்டு பங்கு, விரைவுப் பரிசோதனையான antigénique கொரோனப் பரிசோதனைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகளை ஆராய்ச்சி, ஆய்வுகள், மதிப்பீடு மற்றும் புள்ளியியல் இயக்குகரமான Drees (Direction de la recherche, des études, de l’évaluation et des statistiques)வழங்கியுள்ளது.