⚫🇫🇷பிரான்ஸ் Johnson & Johnson’s தடுப்பூசியில் பக்கவிளைவா? வெளியான முக்கிய தகவல்!

தற்போது புதிதாக பாவனைக்கு வந்துள்ள Johnson & Johnson’s தடுப்பூசியில் பக்கவிளைவுகள் உள்ளதா? என்ற சந்தேக கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. Johnson & Johnson’s தடுப்பூசியினால் பக்கவிளைவு ஏற்படுவதாக சந்தேகம் எழுப்பட்டு சில நாட்களாக பெரும் விவாதமாக மாறியிருந்தது. குறிப்பாக ‘இரத்தம் உறைதல்’ போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக பொதுமக்களிடையே அச்சம் நிலவுகின்றது.

இந்த அச்சத்தை போக்கும் விதமாக l’Agence européenne du médicament இன்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. Johnson & Johnson’s தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவு மிக மிக குறைவானதாக உள்ளதாகவும், ‘இரத்தம் உறைதல்’ எனும் பக்க விளைவுக்கு மிகச்சிறிய அளவில் தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிக மிக அரிதான ஒரு நிகழ்வு எனவும் l’Agence européenne du médicament தெரிவித்துள்ளது. அதேவேளை, பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையில் AstraZeneca மற்றும் இந்த Johnson & Johnson’s தடுப்பூசிகள் மிகவும் அவசியமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.