⚫🇫🇷 பிரான்ஸ் சிறுவர்களுக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட தடுப்பூசி!

5-11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தவறுதலாக இரட்டை தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை இச்சம்பவம் Le Mans நகரில் இடம்பெற்றுள்ளது. 5-11 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இடம்பெற்று வருகின்றது. Le Mans நகரில் உள்ள குறித்த தடுப்பூசி நிலையத்தில் டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து 5-11 வயதுக்குட்ப சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

சனிக்கிழமை குறித்த நிலையத்துக்கு பிரதமர் Jean Castex விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது மேற்படி அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

6 சிறுவர்களுக்கு (5-11 வயது) முதலாவது தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே அடுத்த தடுப்பூசியும் போடப்பட்டது. இவ்வாறு மொத்தமாக 6 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Pfizer தடுப்பூசியே அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.

உடனடியாக சிறுவர்கள் சிறப்பு கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவரகளுக்கு மெலிதான அறிகுறிகள் தென்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.