⚫🇫🇷💉பிரான்ஸில் மீண்டும் Astrazeneca தடுப்பூசிகள்! அச்சத்தில் மக்கள்!

AstraZeneca தடுப்பூசிகள் மீண்டும் அனுமதிக்கப்படும் என அரச பேச்சாளர் அறிவித்துள்ளார். AstraZeneca தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் கிட்டத்தட்ட நிறைவுகட்டத்தை நெருங்கியுள்ளன. அதன் தரவுகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளன என அரச பேசவல்லவர் Gabriel Attal அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, AstraZeneca தடுப்பூசிகள் போடப்படுவது மீண்டும் ஆரம்பிக்கப்படும். நாளை வியாழக்கிழமை ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம் (l’Agence européenne du médicament) வெளியிட உள்ள அறிக்கை முடிவுகளை அடுத்து, மீண்டும் தடுப்பூசிகள் போடப்படும். குறித்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் மிக அரிதான ஒன்றாகும்! என Gabriel Attal அறிவித்துள்ளார்.